பேரறிஞர் அண்ணா..
அவர் பெயரில் கட்சியை வைத்துக் கொண்டு, அவர் முன்னெடுத்த மாநில சுயாட்சியை முற்றிலும் கைவிட்டு, மாநில உரிமைகளை தம் சுயநலத்துக்காக நடுவன்(?) அரசிடம் அடகு வைக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு, அண்ணாவின் சிலைக்கு மாலையணிவிப்பது மட்டுமே இன்றைய அதிகபட்ச செயல்பாடாக இருக்கிறது.
தேர்தலில் நிற்பது என்று கொள்கையளவில் முரண்பட்ட போதும் அய்யாவின் கொள்கைவழி நின்று ஆட்சி நடத்தியவர்.
தந்தைபெரியாரோடு தாம் பயணித்த நாட்களை " எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது" என்றே அண்ணா குறிப்பிடுவார்.
ஆம்.
தமிழகத்துக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது.
அக்காலத்தில்தான் சென்னைமாகாணம் "தமிழ்நாடு" என்ற பெயர்சூட்டப்பெற்றது.
பேரறிஞரின் பிறந்தநாளில் அவர் முன்னெடுத்த கொள்கைகளை சிறிதேனும் நினைவு கூர்வோம்.
No comments:
Post a Comment