நேர்த்தியான வட்ட அலைகளை வரைகிறது குழப்பத்தில் குளத்தில் எறிந்த கல்
அரவமேதுமற்றுச் செல்லும் அரவமென விடியலை நோக்கி ஊர்ந்து செல்கிறது இவ்விரவு
பேசிக் தீர்க்கப் பொழுதுகள் கிடைக்காத காதல் காணும்போதில் முரண்களிலும் காணாப்பொழுதில் பெருந்தேடலிலும் வளர்கிறது 💜
பகலெங்கும் ஒளிந்திருந்து இரவில் ஒலிக்கும் இக்கூகையின் மொழிக்கு மொழிதொலைத்த பெண்ணொருத்தி சுமந்தலையும் மௌனத்தின் சாயல்.