அமரந்திருந்த புல்தரையில்
விரல் பட்ட புல்லொன்றின் நலம் அவாவும் கருணையுனது.
Wednesday, 23 May 2018
உப்பு
புளி
மிளகாய்
பருப்பு
தக்காளி
கூட்டி ஆக்கி இறக்கும் வேளை
தணிந்த அடுப்பின் தணலைக்கூட்ட
தாளொன்றைச் சுருட்டித் திணித்தேன்
பற்றியெரிந்தன விறகுகளும்
கொஞ்சம் என் கவிதைகளும்.
எட்டி எட்டிப் போய்க்கொண்டிருக்கிறாய் தொலைவில்
கிட்ட வந்து நெருங்கித் தழுவுது உன் நினைவு
உப்பு
புளி
மிளகாய்
பருப்பு
தக்காளி
கூட்டி ஆக்கி இறக்கும் வேளை
தணிந்த அடுப்பின் தணலைக்கூட்ட
தாளொன்றைச் சுருட்டித் திணித்தேன்
பற்றியெரிந்தன விறகுகளும்
கொஞ்சம் என் கவிதைகளும்.
Monday, 14 May 2018
உயிர்த்தீயில் உயிர் கருகும் நேரம்
வந்தாய் நீ உயிர் நீராய்.
ஏதுமற்ற வெளியில் எல்லாம் தொலைத்தபடி நின்றுழலும் உயிரின் முனகல் ஒலி
காற்றில் கரைந்து மடிகிறது.
12/05/18
Friday, 11 May 2018
என் ஜீவன் உனக்கு முன்பாக செல்லும்
நானே சத்தியமாய் உன் ஜீவனின்
வலியாய் இருக்கிறேன்
பாவத்தின் சம்பளம் பாதுகாப்பு
சேகர்களுக்கு மட்டும்.