என் விழி அசத்திய சிறுதுயிலென நிகழ்ந்தது உன் வரவு 🖤
நீ வந்து தேடும் ஏதோவோர் பொழுதொன்றில் நானிருக்கப்போவதில்லை என்பதைச் சொல்வதற்காகவேனும் உயிர் வாழ்ந்தாக வேண்டும் இன்று.
கடல் பார்க்க வந்த என்னைப் பார்க்க வந்ததோர் பேரலை.