கட்டு என்ன வெல பாட்டீ?
ஆங்! பாஞ்சு ரூவா?
அட! போன மாசம் பத்துரூபான்னு தானே குடுத்தீங்க? இப்ப என்ன பதினைஞ்சு?
( பொதுவாக காய்கறி கீரை விற்பவர்களிடம் பேரம் பேசுவதில்லை. பாட்டியின் முகபாவம் பேச்சை வளர்க்க வைக்கும். அதற்காகவே)
அதெல்லாம் வெல ஏறிப்போச்சு ஆயா.
க்கும். என்ன கொல்லையில விளைய வக்கிறீங்களா, வேலில வெளஞ்சு கெடக்குறது தானே.
ஆங்! அப்டீனா கல்லு முள்ளு கிளிக்க நீயே போய் பறிச்சுக்க. டெப்பார்ட் கடைல ( departmental store) இந்த கேள்விய கேட்ருவியா? முளுசா முன்னூறு ரூவா சொன்னாலும் வாங்குவிய. இங்க வந்தா சட்டநாயம் பேசுவீங்க.
முறுக்கிக் கொண்டு முகம் திருப்பிக்கொண்ட பாட்டியின் கோவத்தை ரசித்தவாறே ஆறு கட்டு 90 ரூபாய் கொடுத்து வாங்கியவளுக்கு ஒரு பத்து ரூபாய் கட்டு வல்லாரையை சேர்த்து திணித்து அனுப்பினார்.
ஆறு கட்டு ஆவாரம்பூ கீரை. மாலை அமர்ந்து ஆய்ந்து முடித்தாயிற்று. ஆனால் கீரைக்கார பாட்டியின் வார்த்தைகள் மனதை இன்னும் ஆய்ந்து கொண்டே இருக்கிறது.
No comments:
Post a Comment