உன் பிரியத்தின் வாசலில் நிற்கிறேன் கரங்கள் ஏந்தி. மொத்தத்தையும் தருகிறாய் இதயம் திறந்து. செய்வதறியாமல் திகைக்கிறேன் கோடையின் வெம்மை தணிக்கும் ஒரு குவளை நீராய் என் உயிரை நனைக்கிறாய் தோழா.