Saturday, 15 August 2026

மீண்டும் ஒருமுறை பார்க்கிறேன்
உற்று உற்றுப் பார்க்கிறேன்

அதுதானா

அதேதானா

இல்லை என்று கண் சொல்லவில்லை
உண்டென்று மனம் ஏற்கவில்லை 

இருந்தாலும் எட்டிப் பார்க்கிறது முன்னுச்சியில் வெள்ளை

ஆண்டுகள் கழிய வயதொன்று கூடுவதை 
மறைக்காமல் தகழி பகன்றாலும்

நாவும் உதடும் சிவக்கும்
பஞ்சு மிட்டாய் மேல் வைத்த மையல் தீராமல்
உள்ளுக்குள் குதித்துக்கொண்டு தான் இருக்கிறாள் 
சிறுமி ஒருத்தி

16/08/21

Friday, 5 June 2026

நத்தை கூட்டைச் சுமப்பது போல பணிநிமித்தம் 
குடும்பம் துறந்து 
வெளியூரில் வாழும் ஒருவன் நினைவுகளைச் 
சுமந்து திரிகிறான் 
🐌 🐌 🐌

Tuesday, 19 May 2026

எல்லோராலும்
மறக்கப்பட்ட பறவையொன்று 
கானம் பாடித்
தன்
இருப்பைச் சொல்கிறது

க்கோவ்வ்வ்🖤

Saturday, 16 May 2026

சுட்டெரிக்கும் இந்த வெயிலைக் கொஞ்சம்
மழைக்காலத்திற்கென சேமிக்கிறேன்.
யாரேனும் 
சென்ற மழைநாளில் சேமித்த கருமேகத்தில் கொஞ்சம் தாருங்களேன்
♥️

Sunday, 18 January 2026

நந்தவனமொன்றில்
பூ பறித்தானோ
சாக்லேட் மலையொன்றில் ஏறிச்சென்றானோ
நண்பர்கள் சூழ விண்ணில் பறந்தானோ
நாளெல்லாம் சிறகு விரித்த களைப்பின்றி
விடிகாலை உறக்கத்தில் 
குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும்
வெற்றிமாறனின் கனவுக்குள் 
விண்மீன்கள் ஒளிரட்டும்❤️

17.01.2020