எங்கள் வீட்டில் எப்பவுமே பிள்ளையாரெல்லாம் கிடையாது. அப்போதெல்லாம் மனைப்பலகை எடுத்துட்டுப்போய் பிள்ளையார் உருவத்தை களிமண் அச்சில் வார்த்து வாங்கிவந்ததைப் பார்த்திருக்கேன். அக்கம்பக்கத்திலிருந்து இனிப்பு பூரணமும் கார உளுந்து பூரணமும் வைத்து செஞ்ச கொழுக்கட்டை வரும்.
பிள்ளையாரை இந்த அளவிற்கு தான் தெரியும். திருவிளையாடல் படத்தின் மூலம் கொஞ்சம் கூடுதலாக.
இன்று அலுவலகம் போய்ச் சேருவதற்குள் பிரம்மாண்ட பிள்ளையார் ஏழெட்டு பேர் முக்குக்கு முக்கு உட்கார்ந்து இருக்கார். அவர்களுக்கு முன் மூஞ்சூறு சைசிலும் நிறத்திலும் நாலைந்து பொடியன்கள் துண்ணூறு பூசிக்கொண்டு. மனதைத் தைத்த விஷயம் ஒருவன் கூட வெளுப்பா இல்லை. திருத்தமான உடையோடும் இல்லை.
அப்பொடியன்களின் பெற்றோரிடம் சொல்ல விரும்புவது
" போங்கடா! போய் புள்ளகுட்டிகளைப் படிக்க வைங்க"
No comments:
Post a Comment