சென்ற முறை பார்த்த கடலொன்றைப் பார்த்தேன் கால் நனைத்த அலையினில் பழகிய சாயல் ஈரம் கூட அவ்வாறே இதயம் வரை வருடிற்று அலை காலடி மணல் பறித்தபின் சென்ற முறை போலவே சறுக்கி விழுந்தேன் இம்முறை சிரித்தபடி எழுந்தேன்
No comments:
Post a Comment