Saturday, 15 March 2025

ஆழ்கடலின் பெருமூச்சு
சங்கொன்றினுள் சிறைப்படுதல்போல
என்னுள் நீ 🖤

Thursday, 16 January 2025

உனனைப் பார்க்கும்போதெல்லாம் 
கண்ணீர் கரை கட்டுகிறது
வெடித்தழுது தீர்த்து
எதையும் தூக்கி எறிந்துவிட்டுச் செல்பவள் தான்
உன்னைக் கண்டதும் விழி நிறைவை தடுக்க முடியாதவள் ஆகிறேன்
மேல் இமையின் இடுக்கில் வெம்மை நீர் சேரச் சேர
தாங்கவொண்ணா பாரம் கூடுகிறது
வலி நிறைகிறது விழியெங்கும்
மனதின் படபடப்பு கூடக்கூட
ஒரு கட்டத்தில் வலிதாங்காமல்
இமை வெடித்து விடுமோ என அஞ்சுகிறேன்
யாருமறியாமல் வழியும் நீரைத் துடைப்பதைவிட
அந்த வலி தாங்குதல் பேரிம்சை என்பதறிவாயோ
உன் சுடு சொல்லை விட
பரிவான அரவணைப்பு ஏன் இவ்வளவு வலி தருகிறது?