உனனைப் பார்க்கும்போதெல்லாம்
கண்ணீர் கரை கட்டுகிறது
வெடித்தழுது தீர்த்து
எதையும் தூக்கி எறிந்துவிட்டுச் செல்பவள் தான்
உன்னைக் கண்டதும் விழி நிறைவை தடுக்க முடியாதவள் ஆகிறேன்
மேல் இமையின் இடுக்கில் வெம்மை நீர் சேரச் சேர
தாங்கவொண்ணா பாரம் கூடுகிறது
வலி நிறைகிறது விழியெங்கும்
மனதின் படபடப்பு கூடக்கூட
ஒரு கட்டத்தில் வலிதாங்காமல்
இமை வெடித்து விடுமோ என அஞ்சுகிறேன்
யாருமறியாமல் வழியும் நீரைத் துடைப்பதைவிட
அந்த வலி தாங்குதல் பேரிம்சை என்பதறிவாயோ
உன் சுடு சொல்லை விட
பரிவான அரவணைப்பு ஏன் இவ்வளவு வலி தருகிறது?
No comments:
Post a Comment