என் மௌனத்தின்மீது சொல்லெறிபவர்களின்
அர்த்தமற்ற வார்த்தைகளின் அடர்த்தியில் ஒரு நாளும் நான் அமிழ்ந்து போவதில்லை.
கல்லெறிதலால் காயமுறுவதில்லை எந்தப்பூவும்.
காம்பொடிந்து விழுந்தாலும்
காற்றில் தொடரும் மலரின் பயணமென
மௌன மொழிகளோடு பயணித்தே தீருவேன்.
உங்கள் செவிகளில் கேட்கும்
என் இதழ் உதிர்த்த வார்த்தைகளில் ஒலிப்பது
என் மனதின் குரலல்ல .
அழகு
ReplyDelete