அன்பின் வலைப்பூ | அடைக்குந் தாழில்லை
Thursday, 9 October 2025
காய்ச்சலுக்கு மருந்து தரும்
அம்மாவை
ஏய்த்துவிடும் குழந்தைகள்
தத்தம் பொம்மைக்கு
மருந்து தரத்
தவறுவதேயில்லை
கண்டிப்புடன்.
Wednesday, 8 October 2025
விழிகளை உறக்கம் தழுவாமல்
இருள் மட்டுமே கவிந்திருக்கும் இப்பொழுதை
இரவென்று சொல்வதெப்படி?
Wednesday, 1 October 2025
கீச்சிட்டு
அன்றைய பொழுதினை
அளவளாவி
அந்தியில் கூடடைகின்றன
அரசமரச் சிட்டுகள் 🕊️🕊️
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)